இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வெல்லும்: இபிஎஸ் நம்பிக்கை

By நமது நிருபர்

இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வெல்லும்: இபிஎஸ் நம்பிக்கை

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெறும், என, அக்கட்சியின் பொதுச்செயலர்

WhatsApp Facebook

சென்னை: ''மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெறும்,'' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளும், ஏற்கனவே, அ.தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதிகள்; அ.தி.மு.க.,வுக்கு செல்வாக்குள்ள தொகுதிகள். எனவே, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், சென்னை திரும்பிய பின், முழு விபரமும் தெரிய வரும்.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின்வெட்டால், கொசுக்கடியில் மக்களும், படிக்க முடியாமல் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.