திருநெல்வேலி: திருநெல்வேலி சிவராஜபுரத்தைச் சேர்ந்தவர் சரண்யா 21. தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் மேலப்பாளையத்தைச் சேர்ந்த சிவமுருகனுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதுதொடர்பான தகராறில், சரண்யா தனக்கு தெரிந்த இருவர் மூலம் சிவமுருகனை வரவழைத்து தாக்கியுள்ளார். பின்னர் அவரிடம் காசோலையில் வலுக்கட்டாயமாக கையெழுத்து பெற்றுள்ளார். இதுகுறித்து சிவமுருகன் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சரண்யா, திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தர்ராஜ பெருமாள், 21, இசக்கியப்பன், 32, ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
