தீயணைப்பு அதிகாரி விபத்தில் பலி

By தினமலர்

தீயணைப்பு அதிகாரி விபத்தில் பலி
WhatsApp Facebook

திருநெல்வேலி-: திருநெல்வேலி மாவட்டம், அணைத்தலையூரை சேர்ந்தவர் நவீன் ராஜ்குமார், 52. கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய அதிகாரி. திருநெல்வேலி, அன்பு நகரில் குடும்பத்துடன் வசித்தார்.

நேற்று முன்தினம், கங்கைகொண்டானில் பணியை முடித்துவிட்டு டூ - வீலரில் சென்றார். திருநெல்வேலி - நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் நவீன் ராஜ்குமார் பலியானார்.

தாழையூத்து போலீசார் விசாரிக்கின்றனர். இவருக்கு, மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.